Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

போலந்து பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு: பாதுகாப்பு துறையில் ஒத்துழைக்க முடிவு

போலந்து பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு: பாதுகாப்பு துறையில் ஒத்துழைக்க முடிவு
டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க். படம்: பிடிஐ.

இதன் மூலம் இந்தியாவிலிருந்து போலந்துக்கு இயந்திரங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் பொறியியல் பொருட்களை ஏற்றுமதி செய்யப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, போலந்து பிரதமர் டெல்லியில் சந்தித்துப் பேசினார். பாதுகாப்புத் துறையில் இருதரப்பும் ஒத்துழைக்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. மேலும், உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஆகிய துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச முயற்சிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில் டஸ்க்கின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது. உலகளாவிய நிலையற்ற சூழலுக்கு இடையே, இருதரப்பு உத்திசார் கூட்டுறவை மேம்படுத்த இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவும் போலந்தும் ஜனநாயக விழுமியங்களிலும் சட்டத்தின் ஆட்சியிலும் நம்பிக்கை கொண்டுள்ளன. உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒவ்வொரு ஆக்கபூர்வமான முயற்சிக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஆகிய துறைகளில் உறவுகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம். இத்துறைகளில் இந்தியாவுடன் இணைந்து தொழில்நுட்பங்களை உருவாக்கவும், உற்பத்தியில் ஈடுபடவும் போலந்து நிறுவனங்களை அழைக்கிறோம். முக்கியக் கனிமங்கள், நிலக்கரியை வாயுவாக்குதல் ஆகிய துறைகளிலும் போலந்தின் நிபுணத்துவத்துடன் புதிய கூட்டுறவுகளை உருவாக்குவோம்.

இந்தியா–போலந்து நட்பு, தூதரக உறவுகளுடன் மனிதநேயம் மற்றும் பரிவையும் அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின்போது ஜாம் நகர், கோலாப்பூர் அரச குடும்பங்கள் ஆயிரக்கணக்கான போலந்து குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் இந்தியாவில் அடைக்கலம் அளித்தன. அதே மனிதநேய உணர்வுடன், 2022-ல் உக்ரைனிலிருந்து நமது மாணவர்கள் பாதுகாப்பாகத் திரும்ப போலந்து உதவியது.

உலகம் நிச்சயமற்ற சூழலையும் மாற்றங்களையும் எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையிலும் இந்தியாவும், போலந்தும் வளர்ச்சி, தொழில்நுட்பம், புதுமை ஆகியவற்றின் முக்கிய மையங்களாக உருவெடுத்து வருகின்றன. இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, நமது கூட்டுறவுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்த வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்தியாவிலிருந்து போலந்துக்கு இயந்திரங்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் பொறியியல் பொருட்களை ஏற்றுமதி செய்யப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரயில்வே, போக்குவரத்து, மேம்பட்ட உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் போலந்திலிருந்து புதிய முதலீடுகளை ஈர்ப்போம்.

உலகிற்கான நம்பகமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும். 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் நமது பொது இலக்கையும் எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முந்தைய செய்தி
ONGC தலைவராக சுனில் குமார் தேர்வு
அடுத்த செய்தி
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 44 காசுகள் சரிவு

தொடர்புடைய செய்திகள்